பேரூராட்சி இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்,மே6: ஆடு, மாடு, பறவைகளுக்கு கோடைகால தண்ணீர் தொட்டியை அமைத்து புதுக்கோட்ை்ட உள்ளூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் அசத்தியுள்ளது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில் ேகாடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தாகம் தணிக்க குளிர்பான கடைகளை நாடி செல்கின்றனர். இளநீர்,தர்பூசணி,நுங்குகள் ஆகியவற்றை வாங்கி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். மனிதர்கள் வெப்பத்தை தணிக்க ஏதாவது வழியை பின்பற்றலாம்.

ஆனால் கால்நடைகள் தண்ணீர் தாகம் தணிக்க அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருப்பினும் எங்கு சுற்றி திரிந்தாலும் தண்ணீர் தேடி கால்நடைகள் அலையவேண்டியதிருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகளாகவும் மற்றும் கால்நடை வளர்ப்போராகவும் உள்ள நிலையில் வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு மாடுகள் மற்றும் பறவைகள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வந்தன. இதையடுத்து இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாஜலம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் 5 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து ஊரில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து சுத்தமான தண்ணீரை டெம்போ வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நிரப்பி நேற்று முதல் கால்நடை மற்றும் பறவைகள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்காக தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார்.

இதனால் நீர் ெதாட்டிகளை தேடிச்ெசன்று கால்நடைகள் தாகம் தணிக்கிறது. இவரின் இந்த செயலை இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தேவைப்படும் நிலையில் இன்னும் கூடுதலாக பல்வேறு இடங்களில் கால்நடை களுக்கான தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

The post பேரூராட்சி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: