தையல் தொழிலாளர்கள் சங்க ஆண்டு விழா

திசையன்விளை, மே 4: திசையன்விளையில் தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க 22ம் ஆண்டு விழா நடந்தது. வட்டார தலைவர் ஆதிலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் செந்தில், துணை செயலாளர் ஜெபஸ்டின் செல்வகுமார், ஜான்சன், சேக் முகமது, நம்பித்துரை, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெபக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அமைப்பு செயலாளர் சீனிவாசன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, மாநில வணிகர் சங்க பேரமைப்பு இணை செயலாளர் தங்கையா கணேசன், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார், இடையன்குடி கால்டுவெல் வாசகர் வட்ட தலைவர் மருதூர் மணிமாறன், குருநாதன், சங்க மாநில பொதுச்செயலாளர் பாலு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாராயணன், மாவட்ட தலைவர் பகவதி, மாவட்ட செயலாளர் முக்கூடல் முருகேசன், நாசரேத் சார்லஸ், தென்காசி ஆறுமுக வேல்சாமி, வேல்முருகன், காலசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேருந்து நிலையம் அருகில் இருந்து மே தின ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று விழா மண்டபத்தில் நிறைவடைந்தது. விழாவில் பேரூராட்சி துணை தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் முத்துக்குமார், பிரேம்குமார், தர்மசீலன், சதீஷ்குமார், மணலிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் விஜயராஜன் நன்றி கூறினார்.

The post தையல் தொழிலாளர்கள் சங்க ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: