குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு, ஜூன் 12: திருச்செங்கோடு நகராட்சி 4வது வார்டு எட்டிமடைபுதூர் பக்தவச்சலம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் முன்னிலையில், எஸ்ஐக்கள் உதயகுமார், வரதராஜ் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பு, அவசர தொலைபேசி எண்கள் பற்றிய விபரங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறினர். மேலும், டூவீலரில் வந்து நகைகளை பறிப்பவர்களிடம் இருந்து தற்காத்து கொள்வது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை நிராகரித்து விழிப்புடன் இருக்கவும் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு காவல் துறையினர் விளக்கமளித்தனர்.

The post குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: