4 போலீசாருக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு

சேந்தமங்கலம், ஜூன் 14: கொல்லிமலை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த 4 போலீசாருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த அண்ணா, ஜெகதீசன், சரவணன், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேருக்கும், சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஏடிஎஸ்பி தன்னராசு, டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதே போல், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர், பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

The post 4 போலீசாருக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: