மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை: காங். தலைவர் கார்கே தாக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘‘மணிப்பூர் சரியாக 2023ம் ஆண்டு மே 3ம் தேதி பற்றி எரியத்தொடங்கியது. ஒரு ஆண்டு ஆகிறது. அக்கறையற்ற மோடி அரசு மற்றும் திறமையற்ற பாஜ அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ளன. இரக்கமில்லாத பிரதமர் மோடி மாநிலத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. இது அவரது தகுதியின்மை மற்றும் முழு அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஈகோ ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது. மணிப்பூரில் அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்களுக்கும் பாஜ எவ்வாறு தங்களது வாழ்க்கையை துயர்மிகுந்ததாக மாற்றியது என்பது இப்போது தெரியவரும். மணிப்பூரில் தாங்கள் அழித்த எண்ணற்ற உயிர்கள் குறித்து பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் துளிகூட அனுதாபம் இல்லை என்பதை இந்திய மக்கள் இப்போது அறிந்து கொள்வார்கள். பாஜவால் மணிப்பூரின் இயல்பு நிலை, அமைதி பறிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை: காங். தலைவர் கார்கே தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: