வயநாடு தொகுதியில் ராகுலுக்கு தோல்வி பயம்: பிரதமர் மோடி விமர்சனம்

பர்தமான்: கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் தோல்வியடைக்கூடும் என்ற பயத்தினால் ராகுல்காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் – துர்காபூரில் நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி,\” அமேதி தொகுதியில் தோல்வியடைந்து வயநாடு சென்ற காங்கிரஸ் கட்சியின் இளவரசர்(ராகுல் காந்தி) ரேபரேலியில் போட்டியிடுகிறார். இந்த முறை வயநாட்டை இழக்கக்கூடும் என்று அவருக்கு தெரியும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியானது எப்போதும் இல்லாத அளவிற்கு இருக்கும்” என்றார்.

* 50 இடங்களைக்கூட காங்கிரஸ் தாண்டாது
பிரதமர் மோடி பேசுகையில், ‘வயநாட்டில் வாக்குப்பதிவுக்குப் பிறகு, அந்தத் தொகுதியில் தோல்வி பயத்தால், ‘இளவரசன்’(ராகுல்) வேறு இடத்தைப் பார்ப்பார் என்று நான் முன்பே கூறியிருந்தேன். இப்போது, ​​அவர் அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். ஆனால் 50 இடங்கள் கூட கிடைக்காது. நாடு முழுவதும் 50க்கும் குறைவான இடங்களைப் பெறும் காங்கிரசால் நிலையான ஆட்சியை அமைக்க முடியுமா? பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்க முடியும்’ என்றார்.

The post வயநாடு தொகுதியில் ராகுலுக்கு தோல்வி பயம்: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: