குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் எங்கே? பஞ்சாப் பாஜ வேட்பாளருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

ஹோஷியார்ப்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பாஜ வேட்பாளர்கள் பலர் பிரசாரத்துக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், ஹோஷியார்பூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் அனிதா சோம் பிரகாஷ், பரியன் காலன்-பகோவால் இணைப்பு சாலையில் நேற்று பிரசாரத்துக்கு சென்றார். அப்போது விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜக்தார் சிங் பிந்தர் தலைமையில் அனிதா சோம் பிரகாஷ்க்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை வழங்குவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றாதது ஏன் என அவரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த அனிதா சோம்பிரகாஷ்,‘‘மீண்டும் பாஜ ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் இந்த கோரிக்கை பற்றி அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.

The post குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் எங்கே? பஞ்சாப் பாஜ வேட்பாளருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: