காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்; தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் காங்கிரஸ் குறிக்கோள் :பிரதமர் மோடி பேச்சு

மும்பை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் அறிக்கை என்று கூறி வந்த பிரதமர் மோடி, நேற்றைய பரப்புரையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று சாடினார்.

அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நாட்டையே திவாலாக்கிவிடும் என்று சாடினார். கோவில்களில் உள்ள தங்கம் மற்றும் பெண்களின் தாலியை பறிப்பதிலேயே காங்கிரஸ் குறிக்கோளாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். காந்தியின் விருப்பப்படி சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டு இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அடைய வேண்டிய வளர்ச்சியை நாடு தற்போதே கண்டு இருக்கும் என்று மோடி தெரிவித்தார். தமது ஆட்சிக்காலத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்; தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் காங்கிரஸ் குறிக்கோள் :பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: