ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ரூ.2000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள்: வாகன சோதனையில் மடக்கி பிடித்ததால் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ரூ.2000 கோடி பணத்துடன் 4 கண்டெய்னர்களை போலீசார் சோதனையில் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடத்தில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனந்தபுரம் மாவட்டம் பாமிடி மண்டலம் கஜ்ராம்பள்ளியில் நேற்று மதியம் 2 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வரிசையாகவும், மிக வேகமாகவும் 4 கண்ெடய்னர்கள் வந்து கொண்டிருந்தது. உடனடியாக பாமிடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கண்டெய்னர்களை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த கண்டெய்னரை திறந்து பார்த்தவுடன், கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மிகுந்த பதற்றத்துடன் போலீசார் லாரியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் போலீசார் பெரும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 10 நிமிடத்தில் கார் மற்றும் வேன்களில் விரைந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பறக்கும் படைகள், கூடுதல் எஸ்பி உள்ளிட்ட பல்ேவறு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த 4 கண்டெய்னர்களில் மொத்தம் ரூ.2000 கோடி இருப்பது தெரிய வந்தது. இந்த பணம் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் ரூ.500 கோடி ஐசிஐசிஐ வங்கி, ரூ.500 கோடி ஐ.டி.பி.ஐ. வங்கி, ரூ.1000 கோடி பெடரல் வங்கிக்கு சொந்தமானது என்பதும், இந்த பணத்தை ஆர்பிஐ அனுமதியுடன் கொண்டு செல்வதும் தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை சரிபார்த்து அனைத்தும் அரசு உத்தரவுகளுடன் செல்வது உறுதி செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ரூ.2000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள்: வாகன சோதனையில் மடக்கி பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: