சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி


பாலசோர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து டார்பிடோ அமைப்பு சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு பல மேம்பட்ட துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இரண்டு-நிலை திட உந்துவிசை அமைப்பு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்சுவேட்டர் அமைப்பு, துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு போன்றவை இடம் பெற்றுள்ளன.

ஒடிசா மாநிலம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை தரையில் இருந்து ஏவப்பட்டது. இதையொட்டி டிஆர்டிஓ விஞ்ஞானிகள், அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: