புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.73 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.46 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 6,822 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,48,383 ஆக உயர்ந்தது.* புதிதாக 220 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,73,757ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,004 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,79,612 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95,014 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 1,28,76,10,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 79,39,038 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….
The post இந்தியாவில் 558 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 6,822 ஆக வீழ்ச்சி.. ஒரே நாளில் 220 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை!! appeared first on Dinakaran.