தொழிலாளர்கள் பற்றாக்குறை அயோத்தி ராமர் கோயில் பணிகள் முடிவதில் தாமதம்

அயோத்தி: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் கோயிலுடன் தொடர்புடைய ஆடிட்டோரியம், எல்லை மற்றும் சுற்றுவட்டார பாதை உள்ளிட்ட இதர கட்டமைப்புக்களின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கோயில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திரா மிஸ்ரா கூறுகையில், ‘‘அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணியில் முதல் தளத்தில் உள்ள சில கற்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் சுமார் 200 தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தாமதம் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்றார்.

The post தொழிலாளர்கள் பற்றாக்குறை அயோத்தி ராமர் கோயில் பணிகள் முடிவதில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: