கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை எழுதிய சிறுமிக்கு திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம்

திருமலை: கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை எழுதிய சிறுமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மாணவர்கள், இளம் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த கோடி என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. 1 கோடி முறை கோவிந்த நாமாவளி எழுதி வருபவர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம், அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கீர்த்தனா நேற்று 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமாவளி எழுதி திருமலைக்கு கொண்டு வந்து வழங்கினார். முதல் முறையாக கோவிந்த நாமாவளி எழுதிய கீர்த்தனாவை காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சுவாமியை வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டது.

The post கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை எழுதிய சிறுமிக்கு திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: