பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் பிரஜ்வால் ரேவண்னா விசாரணைக்கு ஆஜராவில்லை. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூகார்னர் நோட்டீசும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கர்நாடகாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாசப்படம் வெளியன விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே 5 முறை பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் முறைப்படி எந்த பதிலும் அளிக்கவில்லை. விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால் அவர் எங்கிருகிறார் என்பதை கண்டறிய ஏற்கனவே ப்ளூகார்னர் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி வீடியோ வெளியான உடனே அவர் ஜெர்மனி தப்பி சென்றார். அங்கிருந்து எந்தெந்த நாடுகளுக்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. எனவே அவரது பாஸ்போட்டை முடக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளது.

The post பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: