பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் மறுத்தது பா.ஜ

புதுடெல்லி:மும்பை வடக்கு சென்ட்ரல் தொகுதியில் மறைந்த பா.ஜ மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் வழங்க பா.ஜ மறுத்து விட்டது. அந்த தொகுதியில் பிரபல வக்கீல் உஜ்வல் நிகம் நிறுத்தப்பட்டுள்ளார். மும்பை வடக்கு சென்ட்ரலில் பாஜ வேட்பாளராக வக்கீல் உஜ்வல் நிகம் பெயரை பா.ஜ மேலிடம் நேற்று அறிவித்தது. இந்த தொகுதியில் மறைந்த மூத்த பா.ஜ தலைவர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்பியாக உள்ளார். அவர் 2014, 2019ம் ஆண்டுகளில் தொடர்ந்து இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் பா.ஜ இளைஞரணியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுத்தப்பட்ட உஜ்வல் நிகம், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக இருந்தவர். அதே சமயம் இந்ததொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாராவி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட்டை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இங்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

The post பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் மறுத்தது பா.ஜ appeared first on Dinakaran.

Related Stories: