2 கட்ட தேர்தலிலும் அவுட் வரும் தேர்தல்களில் பாஜ இன்னும் பலவீனமாகும்: அகிலேஷ் யாதவ் கணிப்பு

லக்னோ: வரும் தேர்தல்களில் பாஜவின் நிலை இன்னும் மோசமடையும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி 8 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக நேற்று முன்தினம் 8 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று முன்தினம் வாக்குப் பதிவு முடிந்தவுடன் பாஜ பூத் முகவர் ஒருவர் நிருபரின் கேள்விக்கு, “மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி உள்ளதால் பாஜவுக்கு ஆதரவு குறைந்து விட்டது” என்று கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பதிவில், “10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் அதன் தலைவர்களின் பொய்களுக்கு பிறகு பாஜவின் பூத் முகவர் கட்சியின் உண்மை நிலை பற்றி பேசுகிறார். 2 கட்ட வாக்குப் பதிவுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தேர்தல்களில் பாஜவின் நிலை இன்னும் மோசமாகும். இந்த தேர்தலுடன் பாஜ வௌியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

The post 2 கட்ட தேர்தலிலும் அவுட் வரும் தேர்தல்களில் பாஜ இன்னும் பலவீனமாகும்: அகிலேஷ் யாதவ் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: