அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்

 

திண்டுக்கல், ஏப்.26: வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு உப்பு சர்க்கரை கரைசலை பொது மேலாளர் டேனியல் சாலமன் வழங்கினார். தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், தமிழ்நாடு அரசு கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மண்டலத்தில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 15 பணி மனைகள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 798 வழித் தடங்களில் பணிபுரியும் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் வெயிலின் தாக்கத்தின் பாதிப்பை தவிர்க்க, உப்பு சர்க்கரை கரைசலை நேற்று மண்டல பொது மேலாளர் டேனியல் சாலமன் நடத்துனர், டிரைவர்கள் மற்றும் அந்தந்த கிளை மேலாளர்களிடம் வழங்கினார்.

The post அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: