இன்று ஓட்டுப்பதிவு சட்டீஸ்கரில் விறுவிறுப்பை கூட்டிய ராஜ்நந்த்கான்: பா.ஜவை வீழ்த்துவாரா முன்னாள் முதல்வர் பாகெல்

மக்களவை தேர்தல் 2ம் கட்டத்தில் இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முக்கியமான தொகுதி ராஜ்நந்த்கான். சட்டீஸ்கரின் கலாச்சார நகர் என்று அறியப்படும் ராஜ்நந்த்கான் தொகுதி அரச குடும்ப பாரம்பரியம் மிக்க ஒன்று. 1957ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது முதல் சட்டீஸ்கரில் உள்ள கைராகர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு 7 முறை வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலுடன் சேர்த்து 8 முறை வெற்றி பெற்றுள்ளது. பா.ஜவும் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஜனதா கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடக்கும் தேர்தலில் பா.ஜ எம்பி சந்தோஷ் பாண்டே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் மோதிலால் வோரா, ராமன்சிங் ஆகியோர் போட்டியிட்ட தொகுதி. 2000ம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றதில்லை. 2005ல் நடந்த இடைத்தேர்தலில் மட்டும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அரச வம்சத்தை ேசர்ந்த தேவ்ரத்சிங் வெற்றி பெற்றார். அதன்பின் பா.ஜ கையே ஓங்கி உள்ளது. இந்த முறை பா.ஜவிடம் இருந்து தொகுதியை பறிக்க முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் உள்ளூரை சேர்ந்தவர் இல்லை என்பதால் அங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக பா.ஜ பரப்பி வருகிறது. அதே சமயம் மோடி ஆட்சி மீதான அதிருப்தியில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என்று காங்கிரசார் தெரிவித்து வருகிறார்கள். ஜூன் 4ம் தேதி முடிவு தெரிந்து விடும்.

* ராஜ்நந்த்கான் ஒருபார்வை
மொத்த வாக்காளர்கள் 18,68,021
ஆண் 9,29,679
பெண் 9,38,334
மூன்றாம் பாலினம் 8
வாக்குச்சாவடிகள் 2330

இதுவரை வென்றவர்கள்
1957 ராஜா விரேந்திர பகதூர்சிங்(காங்.)
1962 ராஜா விரேந்திர பகதூர் சிங்(காங்.)
1967 ராணி பத்மாவதி(காங்.)
1971 ராம்சாய் பாண்டே(காங்.)
1977 மதன் திவாரி(ஜனதா கட்சி)
1980 ஷிவேந்திர பகதூர் சிங்(காங்.)
1984 ஷிவேந்திர பகதூர் சிங்(காங்.)
1989 தரம்லால் குப்தா(பாஜ)
1991 ஷிவேந்திர பகதூர் சிங்(காங்.)
1996 அசோக் ஷர்மா(பா.ஜ)
1998 மோதிலால் வோரா(காங்.)
1999 ராமன் சிங்(பாஜ)
2004 பிரதீப் காந்தி(பா.ஜ)
2005 தேவ்ரத்சிங்(காங்.)
2009 மதுசூதன் யாதவ்(பா.ஜ)
2014 அபிஷேக் சிங்(பா.ஜ)
2019 சந்தோஷ் பாண்டே(பா.ஜ)

The post இன்று ஓட்டுப்பதிவு சட்டீஸ்கரில் விறுவிறுப்பை கூட்டிய ராஜ்நந்த்கான்: பா.ஜவை வீழ்த்துவாரா முன்னாள் முதல்வர் பாகெல் appeared first on Dinakaran.

Related Stories: