போலி பேச்சு, பொய்யான வாக்குறுதி; 3ம் கட்ட தேர்தலிலும் பாஜ தூக்கி வீசப்படும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

புடான்: மக்களவை 3ம் கட்ட தேர்தலுடன் மக்கள் பாஜவை தூக்கி எறிந்து விடுவார்கள்” என அகிலேஷ் யாதவ் காட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் புடான் மக்களவை தொகுதியில் நாளை மறுதினம் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்ய யாதவ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு ஆதித்ய யாதவுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய அகிலேஷ் யாதவ்,
“பாஜ கடந்த 10 ஆண்டு ஆட்சியில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கம் என பல்வேறு வாக்குறுதிகளை தந்தது. ஆனால் அவை அனைத்தும் போலியான, பொய்யான வாக்குறுதிகள். நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களில் மக்கள் பாஜவை புரட்டி போட்டு விட்டனர். 3ம் கட்ட தேர்தலில் பாஜ முழுவதும் தூக்கி வீசி எறியப்படும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

The post போலி பேச்சு, பொய்யான வாக்குறுதி; 3ம் கட்ட தேர்தலிலும் பாஜ தூக்கி வீசப்படும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: