சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கு விற்பனை, சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: