ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை ஆக்கிரமித்து பைக் ‘பார்க்கிங்’: பக்தர்கள் சிரமம்

மண்டபம், ஏப்.25: ராமேஸ்வரம் கோவிலின் மேற்கு கோபுர வாசலில் தென் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு செல்லும் நுழைவுப் பகுதி முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மேற்கு கோபுர நுழைவு தென்பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலுக்கு சொந்தமான இந்த முருகன் கோயிலில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தினசரி சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

மேலும் சஷ்டி மற்றும் முருகன் சுவாமிக்கு உகந்த விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலை அருகாமையில் திருக்கோவில் மேற்கு கோபுரம் நுழைவுப் பகுதி மற்றும் முருகன் கோயில் அமைந்திருப்பதால் கோயிலுக்கு முன்பு இருசக்கர வாகனத்தை அதிகளவில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் முருகன் கோயில் சன்னதிக்கு பக்தர்கள் நுழைவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆதலால் முருகன்

The post ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை ஆக்கிரமித்து பைக் ‘பார்க்கிங்’: பக்தர்கள் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: