பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்

பெங்களூரு: கட்சியின் விதிகளை மீறியதாக பாஜவில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா மக்களவை தேர்தலில் தனது மகன் காந்தேஷூக்கு சீட் கேட்டு மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது மகனுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான். அவரது குடும்ப கட்டுப்பாட்டில் மாநில பாஜ இருக்கிறது.

இதை உடைத்தெறிய வேண்டும் என்று அறிவித்து ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். மேலும் பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இவரை சமாதானப்படுத்த பாஜ மேலிட தலைவர்கள் பலமுறை முயன்றும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், பாஜ கட்சியில் இருந்து ெகாண்டே போட்டி வேட்பாளராக தேர்தலில் களம் காண்பதாலும் அவரை பாஜ தலைமை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

The post பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: