தென் மாநிலங்களில் உள்ள 131 தொகுதிகளில் பாஜகவுக்கு 20 சீட்டுக்கு மேல் கிடைக்காது: தெலங்கானா முதல்வர் கணிப்பு

ஐதராபாத்: தென் மாநிலங்களில் உள்ள 131 தொகுதிகளில் பாஜகவுக்கு 20 சீட்டுக்கு மேல் கிடைக்காது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரேவந்த் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘நடப்பு மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. நாடு முழுவதும் 220 இடங்களை கூட பாஜக தாண்டாது. லட்சத்தீவு உள்ளிட்ட தென் மாநிலங்களில் 131 தொகுதிகள் உள்ளன. இவற்றில் கர்நாடகாவில் 13 முதல் 14 இடங்களும், தெலங்கானாவில் 3 முதல் 4 இடங்களும், ஆந்திராவில் ஒரு இடமும் பாஜகவுக்கு கிடைக்கலாம். தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. எனவே, தென் மாநிலங்களில் பாஜக 20 சீட்டுக்கு மேல் கிடைக்காது.

தென் மாநிலங்களை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக இருந்தும், தென்மாநிலங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை. தென்மாநில எம்பிக்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கொடுக்கவில்லை. வாஜ்பாய் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சி நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டு முறை ஆட்சி செய்தது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு முறை ஆட்சி நடத்தி உள்ளது. அதற்கடுத்தாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியே அமையும்’ என்றார்.

The post தென் மாநிலங்களில் உள்ள 131 தொகுதிகளில் பாஜகவுக்கு 20 சீட்டுக்கு மேல் கிடைக்காது: தெலங்கானா முதல்வர் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: