ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

 

நாமக்கல் ஏப்.21: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், சித்திரை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விலை உயர்ந்த முத்துக்களால் ஆஞ்சநேயருக்காக உருவாக்கப்பட்ட முத்தங்கியை பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 

The post ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: