தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா

தென்காசி,ஏப்.20:தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் இசக்கி குழுமத்தின் நிர்வாகி அமிர்தா இசக்கித்துரை தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் மோனிகா டி சோசா, ஒருங்கிணைப்பாளர் அபிராமி வரவேற்றார். குழந்தைவேல் செல்வி முன்னிலை வகித்தார். மேலும் மரங்கள் வளர்ப்பதின் நன்மையை மாணவர்கள் உணரும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஐநூல் ஜன்னத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மழலை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: