அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: அமைச்சர் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து கொள்ளிடம், கொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், ஆலங்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 2004 முதல் 2014ம் ஆண்டு வரை ₹55 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. ₹72 ஆயிரம் கோடிக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது சிலிண்டர் விலை ₹420 தான். பெரும் முதலாளிகளுக்கு ₹15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது பாஜ அரசு. தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி வழங்கி இருந்தால் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

இந்தியாவில் அதிக வரிவசூல் தரும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: