மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசை விட முந்தைய மன்மோகன் சிங் அரசு சிறப்பாக விளங்கியது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலம்!!

டெல்லி : மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசை விட முந்தைய மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 28 அம்சங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 17 அம்சங்களில் மன்மோகன் சிங் அரசே சிறந்து விளங்கி உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த நலத்திட்டங்களின் வளர்ச்சியை தற்போதைய மோடி அரசின் வளர்ச்சியோடு ஒப்பீடு செய்து ஆங்கில இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தற்போது மோடி அரசு பெருமிதம்பட்டு கொள்ளும் பல்வேறு நலத்திட்டங்களின் வளர்ச்சி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட படிப்படியாக குறைந்து இருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றன. ஒன்றிய அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு முடிவுகளில் உள்ள தரவுகள் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, வாழ்க்கை தரம், பெண் கல்வி, குழந்தை திருமணம், ஊட்டச்சத்து, தடுப்பூசி உள்ளிட்ட மொத்தம் 28 காரணிகளில் 17ல் மன்மோகன் சிங் அரசு, 61% மிகச் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுகாதாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றில் மட்டும் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டாலும் வளர்ச்சி தொடர்பாக மோடி அரசு பெருமிதப்பட்டு கொள்ளும் துறைகளில் தரவுகள் அனைத்தும் அதற்கு எதிர்மறையாக இருப்பதாகவும் அந்த ஆங்கில ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

                         மன்மோகன் சிங்                    நரேந்திர மோடி
28 காரணிகளில் 17-ல் (61%) சிறப்பான செயல்பாடு குடிநீர் , சுகாதாரத்தில் மட்டுமே சிறப்பு
2015ல் 68% ரத்த சோகை 58.6% குறைத்த காங். அரசு மீண்டும் 67.1% ஆக உயர்ந்த ரத்தசோகை
குழந்தைத் திருமணத்தை கட்டுப்படுத்திய காங்கிரஸ் அரசு குழந்தைத் திருமண விகிதம் உயர்ந்தது
சாமானியர் மருத்துவக் காப்பீடு பெறும் வாய்ப்பு 48.79% மருத்துவக் காப்பீடு பெறும் வாய்ப்பு 8.57%

The post மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசை விட முந்தைய மன்மோகன் சிங் அரசு சிறப்பாக விளங்கியது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலம்!! appeared first on Dinakaran.

Related Stories: