நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி!: சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னையை சேர்ந்த மருத்துவர் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை..முதலமைச்சருக்கு நன்றி..!!

சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னையை சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நான் முதல்வன் – சென்னையை சேர்ந்த பிரசாந்த் சாதனை:

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த், சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாடு அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 78-ம் இடத்தை பிடித்தார். 24 வயதான பிரசாந்த் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அவரது தாய், ஆசிரியர்கள் உறுதுணையாக நின்றனர்.

பிரசாந்த் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2022 ஜூன் மாதம் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். 2022 ஆகஸ்ட் முதல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக தயாராகி வந்தேன். 2022 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன் என பிரசாந்த் தெரிவித்துள்ளார். பிரசாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் 40 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

8 மாதங்களில் பயிற்சி பெற்று யுபிஎஸ்சியில் தேர்ச்சி:

8 மாதங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்றதாக பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு மருத்துவர் பிரசாந்த் நன்றி:

முதலமைச்சரின் தாயுள்ளத்தால் சாதிக்க முடிந்ததாக மருத்துவர் பிரசாந்த் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மருத்துவர் பிரசாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையில் நான் முதல்வன் திட்டம் மூலம் கிடைத்த நிதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார். நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்தபோது அமைச்சர் உதயநிதியிடம் பதக்கம் பெற்றதை பிரசாந்த் நினைவுகூர்ந்தார்.

The post நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி!: சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னையை சேர்ந்த மருத்துவர் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை..முதலமைச்சருக்கு நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: