பெரம்பலூர் மாவட்டத்தில் 17,18,19, ஜூன் 4ம்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

பெரம்பலூர்,ஏப்.17: பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்றுமுதல் 19ம்தேதி (வாக்குப்பதிவு நாள்) வரை மற்றும் ஜூன் மாதம் 4ம் தேதி (வாக்கு எண்ணி க்கை நாள்) அன்றும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடை கள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்க ளுக்கு விடுமுறை அறிவிக் கப்படுகிறது என மாவட்டக் கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாளை மறுநாள் (19ம் தேதி) நடைபெறஉள்ள 18வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும், அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமதலங்கள் ஆகியவை அனைத்திற்கும் இன்று காலை முதல் நாளை மறு நாள் 19ஆம்தேதி (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி(வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி தினங்களில் மது பான விற்பனை தடை செய் யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக்கூடாது.

மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை அளவுக்கு அதிகமாக வாங்கி பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின்கீழ் குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 17,18,19, ஜூன் 4ம்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: