திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: திருநெல்வேலி தொகுதி பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது வேட்பு மனுவில் குற்ற வழக்கு தொடர்பான தகவல், சொத்து கணக்கைமறைத்துள்ளார். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இதனால் அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம். ஆனால், மனுதாரர் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை, வாக்காளரும் இல்லை. எனவே, இது பொது நல வழக்காகாது. தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

The post திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: