ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்துக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரம் வந்த 400 பக்தர்களில் 100 பேரிடம் மட்டுமே பயணச்சீட்டு இருந்தது.எஞ்சிய 300 பேரிடம் விசாரணை நடத்திய ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். 100 பேரிடம் இருந்து ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பக்தர்கள் அபராதம் செலுத்தாமல் தப்ப முயற்சி செய்தனர். அபராதம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் தடுத்தபோது ஜெய்ஹோ என முழக்கமிட்டனர்.

Related Stories: