நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன்: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரை

பாட்னா: நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்தது:

நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் வளமான இந்தியாவைக் கனவு கண்டார்கள். ஆனால், நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அந்த வாய்ப்பை இழந்தது. 25 கோடி ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது; இது அதிகம் விவாதிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால்…மோடி புகழாரம்:

அம்பேத்கரின் அரசியல் சாசனம் இல்லாவிடில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த ஏழை பிரதமராகி இருக்கமுடியாது. மக்களின் ஆசி, சேவை, நாட்டின் அரசியல் சாசனம் எனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரின் கனவு என மோடி குறிப்பிட்டார்.

மோடியின் உத்தரவாதங்கள்:

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, மோடியின் ‘உத்தரவாத அட்டை’ புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டப்படும். ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும். இவையெல்லாம் மோடியின் உத்தரவாதங்கள் ஆகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகாரில் பல ஆண்டுகளாக ஆர்ஜேடி ஆட்சி செய்து வருகிறது, ஆனால் அவர்களின் அரசு செய்த பணிகளை விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. பீகாரில் ஜங்கிள் ராஜ்ஜின் மிகப்பெரிய முகம் ஆர்ஜேடி… பீகாருக்கு ஆர்ஜேடி இரண்டு விஷயங்களை மட்டுமே கொடுத்துள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

The post நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன்: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: