நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை நிறைவு

பெரம்பலூர்,ஏப்.16: நாளை (17ம்தேதி) மாலை 6-மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அனைத்துக் கட்சியினர் வீதிவீதியாக சென்று வாக்குகள் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 18வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல், தமிழகத்தில் வரும் 19ஆம்தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகு தியில் பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 7,01,400 ஆண் வாக்காளர் கள், 7,44,807 பெண் வாக் காளர்கள், 145இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,46,352 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகு திகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடிகள்உள்ளன.

பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதியில் இந்தியா கூட் டணியில் திமுக சார்பாக கே.என்.அருண்நேரு, அதிமுக சார்பாக சந்திர மோகன், பாஜக சார்பாக ஐஜேகே தலைவர் பாரி வேந்தர், நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்மொழி, பகு ஜன் சமாஜ் கட்சி சார்பாக இளங்கோவன், சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பாக ஜெயக்குமார் மற்றும் 17 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23பேர் களத் தில் உள்ளனர்.இதில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.

அருண் நேருவை ஆதரித்துஅமைச்சர் உதயநிதி ஸ்டா லின், மக்கள்நீதி மையத் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலை வர் செல்வப் பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், மார்க். கம்யூ.கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள்கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா, திமுக தலைமை நிலைய செய லாளர் கே.என்.நேரு, திமுக துணைபொதுச் செயலா ளர் ஆ.ராசா ஆகியோர் தீவிரப் பிரசாரம் செய்துள் ளனர்.

அதிமுக வேட்பாளர் சந்திர மோகனை ஆதரித்து பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேம லதா ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். பாஜக சார்பாக போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரி வேந்தரை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் மட் டுமே பிரசாரம் செய்துள் ளனர். வருகிற 19ம் தேதி வாக் குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது.இதனால் நாளை மாலை 6 மணிக்கு பிறகு பொதுக்கூட்டங்கள், பேர ணிகள், தெருமுனைப் பிரசாரங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஐபி பிரச் சாரங்கள் கிட்டத்தட்ட ஓய்ந்த நிலையில், அந்தந்த கட்சிகளின் மாநில,மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் வீதிவீதியாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தங்கள் கட்சி வேட் பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: