நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. இன்றும் 3 நாட்களில் இத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: ஒவ்வொரு வேட்பாளருக்கும், வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், வேட்பாளருக்கு முதன்மை முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும், வேட்பாளர்கள் பணியாளர்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாகனம் விதம் 8 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும் பட்சத்தில் அக்கட்சிளை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும், செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கணக்கில் சேர்க்கப்படும். அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு கீழ்க்கண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

பைலட் கார்ஸ், கார் உடன் லைட்டிங் கார்கள் போன்ற வாகனங்கள் அனுமதி இல்லை, வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மொழி மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தல் பரப்பரை ஈடுபடக்கூடாது, தனி மனிதரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது, செல்போன்களில் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது கூடாது.
மேலும், அனைத்து வேட்பாளர்களும், 48 நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்களை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதாவது (17ம்தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள்), 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஒளி பெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது, வெளி ஊர்களில் இருந்து வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி இருக்க அனுமதி இல்லை, 5 நபர்கள் மேலாக ஒன்றாக செல்ல அனுமதி இல்லை. 3வது முறையாக வேட்பாளர் தங்களது குற்றப்பின்னணி குறித்த விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் 17ம்தேதி (அளிக்கப்பட்ட காலத்கேடு நாள் 8.4.2024 முதல் 17.4.24) இவ்வலுவகத்தில் தாக்கல் செய்த வேண்டும். 24 மணி நேரத்துக்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியின் விளம்பரம் செய்வதாக இருப்பின் கோயில்களுடன் 48 மணி நேரத்திற்குள் (விசிவிசி) அனுமதி பெற வேண்டும், உரிய உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை வெளியில் எடுத்துச்செல்லவும், பயன்படுத்தும் அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: