காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்: பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை நிர்வாகம், வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ‘தொழிலாளர்களுக்கு விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேணடும் என தொழிற்சாலை நிர்வாகம், வர்த்த நிறுவன பிரதிநிதிகளிடம் கலெக்டர் வலியுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழிற்சாலை நிர்வாகத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள், நாடாளுமன்ற தேர்தல் தினமான 19ம்தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினார். மேலும், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும், தேர்தலில் வாக்களிக்கும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திடுமாறு கேட்டுக்கொண்டார்.

பெரும்பாலான நிறுவனங்கள் தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு, கலெக்டர் பாராட்டுகளை தெரிவித்துகொண்டார். இதேபோல் அனைத்து நிறுவனங்களும், நாடாளுமன்ற தேர்தல் நாள் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திடுமாறு கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் காஞ்சிபுரம் பாலமுருகன், தொழிலாளர் உதவி ஆணையர் சுதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்: பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: