மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி வளாகத்தில் திடீர் தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப கலைக் கல்லூரி வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்து செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் இசிஆர் சாலையில் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, சுதைசிற்பம், கற்சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் 4 ஆண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக புற்கள், செடி – கொடிகள் உள்ளிட்டனை காய்ந்து சருகாக இருந்துள்ளன.

இந்நிலையில், நேற்று மதியம் புற்கள், செடி – கொடிகளில் திடீரென தீப்பற்றியது. பின்னர், மளமளவென அப்பகுதியில் பல இடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில், மாமல்லபுரம் மற்றும் காலவாக்கம் தீயணைப்பு வீரர்கள் 2 வானங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 2 ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 5 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரங்கள், புல்வெளி, செடி – கொடிகள் முழுவதும் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. இந்த திடீர் தீ விபத்தால் மாமல்லபுரம் இசிஆர் சாலை புகை மூட்டமாக காணப்பட்டது.

The post மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி வளாகத்தில் திடீர் தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: