ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் மோடி: சரத்பவார் கடும் குற்றச்சாட்டு

சோலாபூர்: ரஷ்ய அதிபர் புடினை போன்று, இந்தியாவில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றஞ்சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் புடின் அவரது நாட்டில் எப்படி படிப்படியாக ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாரோ, அதேபோல இந்தியாவில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியில் இருந்து யாரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதே மோடியின் எண்ணமாக உள்ளது.

ரஷ்யாவில் தேர்தல் மூலம் புடின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது போன்று, இந்தியாவிலும் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் மோடி செயல்படுகிறார். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதே மோடியின் நோக்கமாக உள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமஅளவில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதிகளே உள்ளன. அதுபோன்ற வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் பாஜக நிபுணத்துவம் பெற்ற கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்’ என்றார்.

The post ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் மோடி: சரத்பவார் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: