நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவலர்கள் தபால் வாக்குகள் பதிவு

நாகப்பட்டினம்,ஏப்.15: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் 1551 வாக்குச்சாவடிகள் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவிற்காக அமைக்கப்படுகிறது. வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், போலீசார் என அனைவரும் தபால் வாயிலாக வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு செய்துள்ளது.

இதை தவிர மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் ஆகியோரும் தபால் வாயிலாக வாக்குப்பதிவை செலுத்த சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்த தொடங்கினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 360 போலீசார் தபால் வாக்குகளை செலுத்த வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டிகளில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். அதே போல் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆயிரத்து 700 அரசு ஊழியர்களும் தங்களது தபால் வாக்குகளை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ள பெட்டிகளில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முதல் நபராக தனது அஞ்சல் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

The post நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவலர்கள் தபால் வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: