மகனுக்காக இன்னும் பிரசாரம் செய்யல… பீல் பண்ணும் பிரேமலதா

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை அருகே நேற்று, அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,`கேப்டன் மறைந்த பின்னர் நான் அவரது நினைவிடத்தில் அமர்ந்திருந்தேன்.

எடப்பாடி பழனிசாமி என்னிடம் வந்து 40 தொகுதிகளிலும் நீங்கள் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறியதால் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இன்னும் எனது மகன் விஜய பிரபாகரனுக்காக வாக்கு கேட்டு விருதுநகர் செல்லவில்லை. இனி தான் நான் விஜய பிரபாகரனுக்கு வாக்கு கேட்டு விருதுநகர் செல்ல உள்ளேன். விஜயபிரபாகரன் மட்டுமே எனது பிள்ளை இல்லை. 40 தொகுதிகளின் வேட்பாளர்களும் எனது பிள்ளைகள்தான்,’என்றார்.

The post மகனுக்காக இன்னும் பிரசாரம் செய்யல… பீல் பண்ணும் பிரேமலதா appeared first on Dinakaran.

Related Stories: