பெரம்பலூரில் காவல்துறையினர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

 

பெரம்பலூர், ஏப்.13: பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழியை போலீசார் ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் -14 -ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தர வின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலை மையிடம்) மதியழகன் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளு க்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர் களுடைய உரிமைக்காக வும், சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன், எளிய மக்களின் உரிமைகளுக் காகவும் சாதி வேறுபாடு கள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடு வோம்.

சகமனிதனை சாதி யின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்று உறுதியளிக்கி றேன் என்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொ ண்டனர். இந்த உறுதிமொழியானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி அலுவலகங்களில் மாவட்ட காவல்துறை மற்றும் அமை ச்சுப்பணியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

The post பெரம்பலூரில் காவல்துறையினர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: