ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: ஏப்.21ல் திருக்கல்யாணம்

 

ஆண்டிபட்டி, ஏப்.13: ஆண்டிபட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. ஆண்டிபட்டி நகரில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தங்கமூலாம் பூசப்பட்ட கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகள் அழைத்து வரப்பட்டு பல்வேறு பூஜைகள் கொடி மரத்திற்கு செய்யப்பட்டது. உற்சவ பல்லக்கு ஊர்வலத்துடன் வலம் வந்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொடி ஏற்றம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா வரும் 21ம் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து நேற்று முதல் மீனாட்சியும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை கோயில் வளாக வீதிகளில் காலை, மாலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் மண்டகப்படி நடைபெறும். முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் ஹரிஸ்குமார், ஆண்டிபட்டி நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: ஏப்.21ல் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: