மோடி அடிக்கடி வருவது ஏன்? நிர்மலா ‘ஓவர் பில்டப்’

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நரசிம்மன், சிதம்பரம் பாஜ வேட்பாளர் கார்த்தியாயினி, தஞ்சை பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூர், சிதம்பரத்தில் பிரசாரம் செய்தார். தஞ்சையில் ரோடு ஷோவும் நடத்தப்பட்டது அப்போது அவர் பேசியதாவது: ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்க கூடிய பாஜ எத்தனையோ எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடிய மாநிலங்களுக்கு எல்லாம், பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளியவர்கள் சிறிய தொழில் தொடங்க வங்கிகளில் எந்த உத்தரவாதமும் இல்லாமல், குறைந்த வட்டியில் கடன் பெறும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ரூ.27 லட்சம் கோடி, மக்களை சென்றடைந்துள்ளது. முதியவர்களுக்கான பென்ஷன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் திட்டம், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளோம். தொழில் வளர்ச்சிக்காக, தமிழகத்திற்கு அடிக்கடி வந்தவர் பிரதமர் மோடி. மேலும் எத்தனையோ முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடி அடிக்கடி வருவது ஏன்? நிர்மலா ‘ஓவர் பில்டப்’ appeared first on Dinakaran.

Related Stories: