நம்ம நாடு திராவிட நாடு… பிரிச்சா தாங்க மாட்டீங்க… பாஜவை விளாசிய நவரச நாயகன்

மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் நேற்று முன்தினம் இரவு பேசியதாவது: நம் நாடு திராவிட நாடு. இந்தியாவில் தான் உள்ளது. நான் பிரித்துப் பேச விரும்பவில்லை.

நீங்கள் எங்களைப் பிரிக்க நினைக்கிறீர்கள். வேண்டாம், நாங்கள் ஒன்று சேர்ந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எங்களுக்குள் யார் சேவை செய்ய வேண்டுமென்ற போட்டி தான். மதத்தில் உள்ளவர்களை கீழே இறக்குங்கள். பூமிக்கு வாருங்கள். நிலத்திற்கு வாருங்கள். மக்களை பாருங்கள். மக்களுக்கு பணியாற்றுவோம். வெள்ளைக்காரர்களிடம் ஒரு முறை ஏமாந்தது போதும். இனியும் ஏமாற மாட்டோம்.

ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்கள் என்ன செய்து விட்டார்கள்? நான் யாரைச் சொல்கிறேன், எதற்காகக் சொல்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்வது உண்மைதானா? சரியா, கரெக்டா? எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். நாம் அடிமை வாழ்க்கை வாழ்ந்தது போதும்.
நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் மை வைக்கும் விரலால் ஓங்கி அடியுங்கள். இந்தியர்கள் மனம் மாற வேண்டும் என கூற முடியாது. குணம் மாற வேண்டும் என கூற வேண்டும். உங்கள் ஆட்சி நல்லா இருந்தால் மக்கள் ஏன் மாற்றத்திற்கு ஆசைப்படுகிறார்கள். புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ இவ்வாறு கூறினார்.

பாஜவின் செயல்களை குறிப்பிட்டு அவர்களை நேரடியாக சொல்லாமல் நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நம்ம நாடு திராவிட நாடு… பிரிச்சா தாங்க மாட்டீங்க… பாஜவை விளாசிய நவரச நாயகன் appeared first on Dinakaran.

Related Stories: