தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காச்சிகுடா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு

தஞ்சாவூர், ஏப்.11: மதுரையில் இருந்து ஐதராபாத் மாநிலம் காச்சிகுடாவுக்கு தஞ்சாவூர் வழியாக புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தொடங்கியது. அதனை காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, தர்மாவரம், அனந்தபூர் வழியாக காச்சிகுடா ஐதராபாத் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது இரு மார்க்கங்களிலும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வழங்கிய தென்னக ரெயில்வே தலைமை போக்குவரத்து மேலாளர், முதன்மை இயக்க மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், முதுநிலை வணிக மேலாளர் மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினருக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இருந்து ஐதராபாத் மாநிலம் காச்சிகுடாவுக்கு தஞ்சாவூர் வழியாக புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்ததும் காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்ணன், ஜீவகுமார், திருமேனி, உமர் முக்தார், செல்ல கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரையில் இருந்து ஐதராபாத் காச்சிகுடா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது மதியம் 3.15 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக காச்சிகுடாவில் இருந்து மதுரை ரயில் நிலையம் நோக்கி வரும் போது இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தி பயணிகள் பயன் பெறலாம்.

The post தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காச்சிகுடா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: