வாக்குப்பதிவு, வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில்

பெரம்பலூர், ஏப்.11: நடைபெறவுள்ள நாடாளு மன்றப் பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங் களில் பயன்படுத்தப் படவுள்ள வாக்காளர் சரி பார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் வேட்பாளர்களின் புகைப்படம்,பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதி வேற்றும் பணிகளை பெரம் பலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று (10ஆம்தேதி) பெரம்பலூர் சப்.கலெக்டர் அலுவலகத் திலும் மற்றும் துறையூர் நகராட்சி அலுவலகத்தி லும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024 நாடாளு மன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட 147-பெரம்பலூர்(தனி), 137-குளித்தலை, 143-லால்குடி, 144-மண்ணச்சநல்லூர், 145-முசிறி, 146-துறையூர்(தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகு திகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத் தப் படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், கட்டுப்பாட்டுக் கருவி கள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியவை இணைய வழியில் கணினி முறையில் குலுக்கல் செய்யும் பணிகள் முடிவுற்றுள் ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர்(தனி) சட்டமன் றத் தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பயன்படுத்தும் வகையில் 796 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 398 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 431 வாக்கா ளர் சரிபார்ப்பு கருவிகளும் (VVPAT) இணையவழியாக கணினி முறையில் ஒதுக் கீடு செய்யப்பட்டது. குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடி மையங்க ளில் பயன்படுத்தும் வகை யில் 648 மின்னணு வாக்கு ப்பதிவு இயந்திரங்களும், 324 கட்டுப்பாட்டுக்கருவிக ளும், 351 வாக்காளர் சரி பார்ப்பு கருவிகளும், லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 251 வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பயன்படுத்தும் வகையில் 602 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளும், 301 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 326 வாக்கா ளர் சரிபார்ப்பு கருவிகளும், மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியிலுள்ள 273 வாக்குச்சாவடி மையங் களுக்கு பயன்படுத்தும் வகையில் 654 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களும், 327 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 354 வாக்கா ளர் சரிபார்ப்பு கருவிகளும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 260 வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பயன்படுத்தும் வகையில் 624 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களும், 312 கட்டுப்பாட்டுக் கருவிகளும்,338வாக்காளர் சரிபார்ப்புக் கருவிகளும், துறையூர்(தனி) சட்ட மன்றத்தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங் களுக்கு பயன்படுத்தும் வகையில் 668 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளும், 334 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 362 வாக்கா ளர் சரிபார்ப்பு கருவிகளும் என மொத்தம் 1,665 வாக்கு ச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் வகையில் 3,992 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,996 கட்டுப்பாட்டுக் கருவி களும், 2,162 வாக்காளர் சரி பார்ப்பு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று முதல், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணியும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், புகை ப்படம், சின்னம் ஆகியவை அடங்கிய விவரங்கள் பொருத்தும் பணியும் நடை பெற்று வருகிறது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக் கான உதவித் தேர்தல் நடத் தும் அலுவலரான, சப்.கலெ க்டர் அலுவலகத்தில் வாக் காளர் சரிபார்ப்பு இயந்திர ங்களில் சின்னங்கள் பதி வேற்றறும் பணியினையும், மண்டலங்கள் வாரியாக அனுப்பி வைப்பதற்கு மின் னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை பிரித்து வைக் கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல ரான கற்பகம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி அலுவ லகத்தில் துறையூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன் படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் வேட்பாளர்களின் புகைப்படம் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பட்டியில் பொருத்தும் பணி யினையும் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய் தார்.
இந்த நிகழ்ச்சிகளில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள் கோகுல் (பெரம்பலூர்), குணசேக ரன் (துறையூர்), பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன், வட் டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்) வனஜா (துறையூர்) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வாக்குப்பதிவு, வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் appeared first on Dinakaran.

Related Stories: