பராக் 76 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி மோகித் பந்துவீச்சில் விஜய் ஷங்கர் வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சாம்சன் 68 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் உமேஷ், ரஷித், மோகித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய குஜராத் கடைசி ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 197 என்ற இலக்கை எட்டி ராஜஸ்தான் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது. சுப்மன் கில் அதிரடியாக 72 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அடுத்ததாக சாய் சுதர்சன் 32 ரன் எடுத்தார். கடைசி வரை போராடிய ரஷித்கான் 24 ரன்னும், ராகுல் டிவேடியா 22 ரன்னும் எடுத்து குஜராத்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இதனால், ராஜஸ்தான் அணியின் பராக்-சாம்சன் ஜோடியின் அதிரடி வீணானது. ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் குல்தீப் சென் 3 விக்கெட், சகால் 2 விக்கெட் வீழ்த்தினர்.
The post பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத் appeared first on Dinakaran.