என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லை: இயக்குநர் அமீர் பேட்டி

மதுரை: ‘என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன். எந்த விசாரணைக்கும் தயார்’’ என்று மதுரையில் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் திடலில் இன்று காலை ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது வீட்டில் என்.சி.பி 11 மணி நேர விசாரணை மற்றும் ஈடி ரெய்டு நடந்தது உண்மை தான். ஆனால், என்ன எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து நான் சொல்வது ஒன்று தான்.

எந்த விசாரணைக்கும் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லை. என்னை குறிவைத்து விசாரணை நடைபெறுகிறதா? என கேட்கிறீர்கள். உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன். என்னால், ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை. இறைவன் மிகப்பெரியவன் என சொல்லி கொண்டு கடந்து போகிறவன் நான். ஈடி விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கான அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. நேற்றிரவு ஈடி சோதனை முடிவடைந்தது. இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள்.

The post என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லை: இயக்குநர் அமீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: