ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த மாதத்திலும் ஆயுள் சான்றிதழை புதுப்பித்துக்கொள்ளலாம்

 

திருச்சி, ஏப்.10: அனைத்து EPS ஓய்வூதியதாரர்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இதுவரை புதுப்பித்து வந்தனர். ஆனால் தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஆண்டின் எந்த மாதத்திலும் சமர்ப்பிக்கலாம் என உதவி பி.எப் கமிஷனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஜீவன் பிரமான் மூலம் டிஎல்சி-யினை ஓய்வூதிய வழங்கல் வங்கிகள், பொது சேவை மையங்கள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது அருகிலுள்ள பி.எப் அலுவலகத்தில் செய்து கொள்ளலாம். இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாகவும் டி.எல்சி-யை சமர்ப்பிக்கலாம்.

அவர்களின் எப்ஏ (முக அங்கீகார தொழில்நுட்பம், பயன்பாடுகளை பயன்படுத்த, ஆதார் பேஸ் RD APP (செயலி) மற்றும் ஜீவன் பிரமான் APP (செயலி) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து இவற்றின் வாயிலாக சான்றிதழை புதுப்பித்து கொள்ளலாம்.

EPS ஓய்வூதியதாரர் அல்லது சார்புடைய ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவரது உற்றார், உறவினர்கள் தேவையான ஆவணங்களுடன் PPO எண், வங்கி கணக்கு விவரங்கள், இறப்பு சான்றிதழ் இணைத்து கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் EPF அலுவலகத்திற்கு ro.trichy@epfindia.gov.in என்ற இணையதள முகவரியில் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம். மேலும் விவரங்களுக்கு www.epfindia.gov.in என்ற இணையதளத்தை தெரிந்து கொள்ளலாம்.

The post ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த மாதத்திலும் ஆயுள் சான்றிதழை புதுப்பித்துக்கொள்ளலாம் appeared first on Dinakaran.

Related Stories: