பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்கம்

 

பெரம்பலூர்,ஏப்.10: பெரம் பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகை யில் நீச்சல் கற்றுக்கொள்ளும் வகுப்பு நேற்று தொடங்கியது. இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் வகுப்பு அரசு வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி நடத்திட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் அறிவித்துள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று(9ம்தேதி) காலை 6.30 மணிமுதல் 5பேட்ஜ்களாக தொடங்கி நடைபெறுகிறது.இதன்படி முதல் பேட்ஜ் நேற்று (9ம்தேதி) முதல் 21ம் தேதிவரையும், 2வது பேட்ஜ் வருகிற 14ம்தேதி முதல் 25ம்தேதி வரையிலும், 3ஆவது பேட்ஜ் வரு கிற 27ம்தேதி முதல் மே- மாதம் 8ம்தேதி வரையும், 4வது பேட்ஜ் மே- மாதம் 10ம் தேதிமுதல் மே-மாதம்21ம் தேதி வரையும், 5வது பேட்ஜ் மே-மாதம் 23ம்தேதி முதல் ஜூன் மாதம் 3ம் தேதி வரையும் என மொத்தம் 5 பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர் மற்றும் பொதுமக்களுக் கும் நடத்தபடுகிறது.

இதற்கான பயிற்சி நேரம் காலை 7மணி முதல் 8மணி வரையிலும், பிறகு 8மணி முதல் 9மணிவரையிலும் நீச்சல் பயிற்சி வகுப்புக ளும், 9 மணி முதல் 10மணி வரை பெண்களுக்கான நீச்சல் பயிற்சி வகுப்பும், 11 மணிமுதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பயன் பாட்டிற்கும், மாலை 4மணி முதல் 5 மணிவரையிலும், மாலை 5மணிமுதல் மாலை 6மணி வரை நீச்சல் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. 12 நாட்கள் பயிற்சி அளித்தபிறகு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா நேற்று காலை நீச்சல் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நீச்சல் பயிற்சி யாளர் முனியப்பன், நீச்சல் குள பராமரிப்பாளர்கள் உதவியுடன் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். நீச்சல் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர் கைபேசி எண்-74017 03516 மற்றும் நீச்சல்குள பயிற் சியாளர் கைபேசி எண் 88704 39645) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

The post பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: