சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தகவல்

 

ராமநாதபுரம், ஏப். 10: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பன் தலைமையில் மதுவிலக்கு காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கணேஷன், ஆவுல் ஹனிபா, தட்சிணாமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகியோரிடமிருந்து 64 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

The post சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: